ஆரோக்கிய நிகேதனம்... ஆயுர்வேத மருத்துவத்தை மையமாக எழுதப்பட்ட மருத்துவ நாவல்.
கல்கத்தா மாநகரத்தின் பக்கம் ஒரு கிராமத்தில் இருக்கும் மருத்துவமனை 'ஆரோக்கிய நிகேதனம்'. மூன்று தலைமுறையாக ஆயுர்வேத மருத்துவம் பார்க்கும் 'கவிராஜ்' குடும்பத்தில் வந்தவர் 'ஜீவன் மஷாய்'கதையின் உயிர் நாடியாக வருபவர். அலோபதி படிக்க நினைக்கும் ஜீவன், தன் தவறால் அந்நிலையில் இருந்து விலகினாலும் தன் தந்தை சொல்லை வேதவாக்காக நினைத்து ஆர்வமாக ஆயுர்வேத மருத்துவம் பயின்று கைதேர்ந்த மருத்துவராக அக்கிராமத்தில் சேவை புரிகிறார். மருத்துவத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் நோயறிதல் முறையான 'நாடி பரிசோதனை'யில் கைதேர்ந்தவராக உள்ளார். 'அவர் நாடி பார்த்தால் எந்த நோயில் இருந்தும் குணமடையலாம் என்ற நம்பிக்கை அவ்வூர் மக்களிடம் இருந்தது. நோயை மட்டும் அல்லாது, சில நோயாளிக்கு நாடி பார்த்து அவர்களின் ஆயுளை கண்டறிந்து சொல்லவும் செய்வார்.ஏழை நோயாளிகளிடம் மருத்துவத்திற்கு எந்த பணமும் வாங்க மாட்டார். அதனால் அவரை அம்மக்கள் கொண்டாடினர்.
அந்நேரம் அலோபதியின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைகிறது. மஷாயின் நாடி பரிசோதனை முறையும், அலோபதியின் நவீன இயந்திர தனமான நோயறிதல் முறையும் ஏற்படும் போட்டி துவங்குகிறது.நாடி பரிசோதனையின் மூலம் 'சாவோலை' எழுதிகிறார் என்று பின்னாட்களில் மக்களுக்கு மஷாயின் மீது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. இது அம்மக்களை அலோபதியின் பக்கம் தள்ளுகிறது. நவீன மருத்துவர்களும் அவர் மேல் வீணாக பழி போட துணிகிறார்கள். இத்தடைகள் அனைத்தையும் தாண்டி 'ஜீவன் மஷாய்' என்றும் 'மக்களின் மருத்துவராக' இருக்கிறார் என்பதே கதை.
ஜீவன் மஷாய் தன் மகன் வனவிஹாரின் சாவோலை குறிக்கும் இடம் நம் மனதை ரணமாக்குகிறது. தன் கணவரின் 'சாவோலை' அறிவிப்புகளால் கோபம் கொள்ளும் மஷாயின் மனைவி ஆத்தர் -பௌ, எந்நேரமும் கணவனை வசைபாடும் மனைவியாக இருந்தாலும் மஷாயின் இறுதி மூச்சு நிற்கும் இடத்தில் தன்னையும் மாய்த்து கொள்வதில் அவர் அன்பு புலப்படுகிறது.
அலோபதி மருத்துவர்களாக வரும் ஹரேன், சாருபாபு, பிரத்யோத், இவர்களில் பிரத்யோத் மட்டும் ஜீவன் மஷாயை பரம எதிரியாக பார்க்கும் மனோபாவம் கொண்ட கதாபாத்திரம். பின்னாட்களில் அவரின் மனைவி மஞ்சுவின் உயிரை ஜீவன் மஷாயே காக்க போகிறார் என்று தெரியாமல் அவரை மருத்துவத்தில் போட்டியாக கருதுகிறார்.பின் மஷாயின் மேல் ஏற்பட்ட மதிப்பால், தன் நோயாளிகளுக்கும் நாடி பார்க்க அவரை அழைக்கும் அளவு நெருக்கமாகிறார்.
நாடி பரிசோதனையின் மகத்துவத்தை இக்கதை உணர்த்தியது. நோயின் தன்மை, அதன் விவரங்கள், நோயாளி இருக்கும் அறையில் ஏற்படும் துர்நாற்றம், நோயாளியின் தலை முதல் கால் வரை கவனித்தல்,கேள்வியின் மூலம் வலிகளை அறிதல், நாக்கு நுனி, வயிறை தொட்டு பார்த்தல் என நோயறிதலை ஒவ்வொரு படிநிலையாக விளக்குகிறார் ஜகத் மஷாய், ஜீவனின் தந்தை. சுற்றுப்புறக் காட்சிகளாலோ, ஓசைகளாலோ நம் உணர்வை சிதற விடாமல் நாடி பார்த்தால் ஐம்புலனுக்கும் எட்டாத சக்தியை அறியமுடியும் என்று அவர் விளக்கும்போது நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.
"பிறக்கும் போதே மரணத்தின் வாசல் நமக்கு திறந்தே இருக்கும்"
"மனிதன் எப்போதும் உதவியை தேடும் பிராணி "
"நோய்களுக்கு ஒளடதங்களும், சிகிச்சையும் இருக்கிறது. ஆனால் மரணத்திற்கு சிகிச்சையும் இல்லை, மருந்தும் இல்லை"
போன்ற வரியின் நிதர்சனத்தை புரிந்து கொள்ள முடிந்தது.அலோபதி மருத்துவத்தில் நோயில் இருந்து விடுபடும் ஒருவனை சசி, "இனி உனக்கு மரணமே இல்லைல " என கிண்டல் செய்யும் இடம் நகைப்பை வரவழைக்கிறது.
இடையில் மஷாயின் காதல் கதை, தன் வாழ்வின் ரணமான பகுதியாக அதை நினைக்கும் மஷாய், தன் இறுதி காலத்தில் தான் விரும்பிய 'மஞ்சரி'கே சாவோலை குறிக்கும் நிலை வரும் என்பது எதிர்பாராத திருப்பம்..
நாவல் முழுவதும் நோய்களின் பெயர்கள், நோயாளிகள், மருத்துவம், இறப்பு என நகர்கிறது. இதனால படிக்கும் போது நம்மையும் ஒரு sickness க்கு தள்ளுகிறது.தமிழா? சமஸ்க்ரிதமா? என புரியாத அளவு நிறைய புதிய வார்த்தைகள் இருப்பதால் படிக்க மலைப்பாக இருக்கிறது.
தற்கால நவீன அலோபதி மருத்துவம் மனிதனின் சாவை தள்ளிபோடுவதிலேயே குறியாகவும், அதன் மூலம் மருத்துவத்தை வியாபார நோக்கோடு செயல்படுவதையும்,நவீனம் என்ற பெயரில் நமது மரபுவழி மருத்துவத்துக்கு எவ்வாறு சாவோலை எழுத பிரயத்தன படுகிறது என இந்நூல் உணர்த்தியது. மஷாயின் இறுதி மூச்சு நின்றாலும், அவரின் நினைவை சுமக்க வைக்கிறது இந்நாவல். நன்றி.

Comments
Post a Comment